×

மன்னார்குடியில் கஞ்சா விற்ற 3 பேர் அதிரடி கைது: குண்டர் சட்டம் பாயும் என எஸ்பி எச்சரிக்கை

மன்னார்குடி, மே 15: திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்களை பதுக்கி வைத்து சட்ட விரோத விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு எஸ்பி ஜெயக்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மன்னார்குடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்யராஜ் அறிவுறுத்தலின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மன்னார்குடி கீழப்பாலம் அடுத்த முதல் சேத்தி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர்(பொ) ராஜேஷ் தலைமையில் டவுன்எஸ்ஐ முருகன் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முதல் சேத்தி சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த மன்னார்குடி பட்டக்கார தெருவை சேர்ந்த குணா என் கிற சற்குணம் (28), மும்மூர்த்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த தீபன் என்கிற பார்த்தீபன் (31), முதல் சேத்தி கிராமத்தை சேர்ந்த சபரி கண்ணன் (22) ஆகிய மூன்று நபர்களை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் கஞ்சா விற்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் பதுக்கி வைத் திருந்த 1100 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

இதுகுறித்து வழக்கு பதிந்து மூன்று நபர்களையும் கைது செய்து மன்னார் குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் கிளைச் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என எச்சரித்தார்.

The post மன்னார்குடியில் கஞ்சா விற்ற 3 பேர் அதிரடி கைது: குண்டர் சட்டம் பாயும் என எஸ்பி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Jayakumar ,Tiruvarur district ,SP ,
× RELATED கும்பகோணம், மன்னார்குடி சாலையில்...