×

ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழை திருவாரூர் மாவட்டத்தில் ஆட்டுக்ெகால்லி தடுப்பூசி

திருவாரூர், மே 15: திருவாரூர் மாவட்டத்தில் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருவதால் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளை வளர்த்து வரும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்களது ஆடுகளுக்கு தடுப்பூசியினை செலுத்தி கொள்ளுமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஆட்டுக் கொல்லி நோய் ஒன்றாகும். இந்நோய் மிக கொடிய வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. இக்கிருமியானது நோய் பாதித்த ஆடுகளின் சிறுநீர், கண்ணீர், கழிச்சல் மற்றும் சாணம் ஆகியவற்றின் மூலம் மிக விரைவில் பரவக்கூடியது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளின் வாயிலும், நாக்கிலும், ஈறுகளிலும் புண்கள் ஏற்படும். நோயினால் அவதிப்படும் ஆடுகளின் கண்கள், மூக்கு மற்றும் வாயிலிருந்து நீர் வடியும். தும்மல் மற்றும் இருமல் பிறகு ஆரம்பிக்கும். அவைகள் தீனி உட்கொள்ள முடியாமல் மிகவும் பாதிக்கப்படும். மிகவும் மெலிந்துவிடும்.
வெயில் காலத்தில், நோயினால் பாதிக்கப்பட்ட வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு மூச்சிரைக்கும். காய்ச்சல் வரும். இறுதியில் கழிச்சல் கண்டு ஆடுகள் இறந்து போகும். நோய் தாக்கிய ஆடுகளில் நோயின் அறிகுறிகள் 6 நாட்களுக்கு இருக்கும். குட்டிகளில் அதிக இறப்பு ஏற்படும். இதனால் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வளர்ப்போர்க்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும்.

எனவே, இந்நோய் தாக்கா வண்ணம் இருப்பதற்கு, வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு வருடத்திற்கு ஒரு முறை தடுப்பூசிப் பணி மேற்கொள்வது ஒன்றே சிறந்த நிவாரணம். அதன்படி, மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால், கால்நடை நலம் மற்றும் நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஆட்டுக் கொல்லி நோய் ஒழிப்புத் திட்டத்தில் தடுப்பூசிப்பணிகள் கடந்த மாதம் (ஏப்ரல்) 29ம் தேதி முதல் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

எனவே மாவட்டத்தில் ஆடுகளை வளர்த்து வரும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்பொழுது, 4 மாதத்திற்கு குறைவான வயதுள்ள ஆட்டுக் குட்டிகள் மற்றும் சினையுற்ற ஆடுகள் நீங்கலாக மற்ற அனைத்து ஆடுகளுக்கும் தவறாமல் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி செலுத்திகொண்டு பொருளாதார இழப்பிலிருந்து பாதுகாத்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தேசிய மின்னணு கால்நடை இயக்க தரவுகளின்படி தடுப்பூசி போடப்படும் அனைத்து ஆடுகளுக்கும் பார்கோடுடன் கூடிய காதுவில்லைகள் அணிவித்து பாரத் பசுதான் செயலியில் தடுப்பூசி போடப்பட்ட ஆடுகள் விவரங்கள், உரிமையாளர்கள் விவரங்கள் பதிவு செய்யப்படும். இதற்காக இப்பகுதிக்காக பிரத்யேகமாக வழங்கப்பட்ட வெளிறிய ஊதாநிற காதுவில்லைகள் ஆட்டினங்களுக்கு அணிவிக்கப்படும்.
எனவே தடுப்பூசி பணிக்கு ஒத்துழைப்பு நல்கவும் தடுப்பூசிப்பணியினை பயன்படுத்திக்கொண்டு அனைத்து கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் ஆடுகளை இக்கொடிய நோய் வராமல் பாதுகாக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழை திருவாரூர் மாவட்டத்தில் ஆட்டுக்ெகால்லி தடுப்பூசி appeared first on Dinakaran.

Tags : Tiruvarur district ,Tiruvarur ,Collector ,Charu ,
× RELATED தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து...