×

காய்கறி சாகுபடியில் ரசாயன உரத்தை தவிர்க்க அறிவுறுத்தல்

சிவகங்கை, மே 15: சிவகங்கை மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது, மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழப்பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இவைகளில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ரசாயன உரம், மருந்துகளை தவிர்த்து இயற்கை வழி உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும். நன்றாக மக்கிய தொழு உரம், மண்புழு உரம், மண்ணின் பௌதிக குணத்தை மேம்படுத்தி உற்பத்தி தன்மையை அதிகரித்து கொடுக்கும். அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இயற்கை முறையிலேயே அளிக்கும்.

பஞ்சகாவ்யா போன்ற திரவநிலை உரங்களை தெளிப்பதால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் பூ பூக்கும் தன்மை அதிகரிக்கும். வேப்பம் புண்ணாக்கு கரைசல், வேப்ப எண்ணை, வேப்பங்கொட்டை சாறு போன்ற வேம்பு சார்ந்த பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காய்கறி சாகுபடியில் ரசாயன உரத்தை தவிர்க்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai District Horticulture Department ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...