தேனி, மே 15: தேனி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவில் 90.08 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 24 வது இடத்தை பிடித்து கடந்த ஆண்டைக்காட்டிலும் பின்தங்கியது. தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 1 தேர்வுகள் நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடுபள்ளிக்கல்வித் துறை தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டது.
தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள், சுயநிதிப்பள்ளிகள், மெட்ரிக்மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 143 பள்ளிகளைசேர்ந்த 6 ஆயிரத்து 432 மாணவர்கள், 6 ஆயிரத்து 881 மாணவியர் என மொத்தம் 13 ஆயிரத்து 313 மாணவ,மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களில் 5 ஆயிரத்து 521 மாணவர்கள், 6 ஆயிரத்து 471 மாணவியர் என மொத்தம் 11 ஆயிரத்து 992 பேர் தேர்ச்சி பெற்றனர். இவ்வாண்டு மாணவர்கள் 85.84 சதவீதமும், மாணவியர் 94 சதவீதம் பேருமாக மொத்தம் 90.08 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் தேனி மாவட்டம் 24 வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு தேனி மாவட்டம் 19 வது இடம் பெற்றிருந்த நிலையில் இவ்வாண்டு 24 இடத்திற்கு சென்று பின்தங்கியுள்ளது.
The post தேனி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 90.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில் 24வது இடத்திற்கு பின்தங்கியது appeared first on Dinakaran.