போடி, மே 15: போடி-தேவாரம் மாநில நெடுஞ்சாலையில் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் சாலையைக் காட்டிலும் உயரமாக கேட் வால்வு தொட்டிகளின் உயரத்தைக் குறைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. போடி-தேவாரம் மாநில நெடுஞ்சாலை 3.75 மீட்டர் அகலத்தில் குறுகலாக இருந்த நிலையில் தற்போது 10 மீட்டர் அகலச் சாலையாக மாற்றி அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தச் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மேலும் 6 மீட்டர் அகலப்படுத்த வேண்டும் என மாநில நெடுஞ்சாலையினர் சார்பில் தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டது. தமிழக அரசு அதனை ஏற்று 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து விரிவாக்கப்ப பணியை செய்திட உத்தரவிட்டது.
அதன்படி கடந்த ஆறு மாதமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அகலமான கழிவுநீர் வாறுகால் வசதியுடன் சாலையை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் கரட்டுப்பட்டி வாய்க் கால் புலியூத்து கால்வாய் இராணி மங்கம்மாள் சாலை கால்வாய் கடக்கும் மூன்று குழாய் பாலம் அகற்றப்பட்டு 3 புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சாலை நடுவில் மெகா கான்கிரீட் தடுப்பு சுவர்களும் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் போடி நகராட்சி மற்றும் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி பகுதிகளில் மாநில நெடுஞ்சாலையில் பதிக்கப்பட்டு கடக்கும் குடிநீர் மெயின் குழாய்கள் உள்ளது. அதற்கான கேட் வால்வுகள் இருக்கும் பகுதிகள் சிமெண்ட் சிலாப்கள் வைத்து மூடப்பட்டிருந்தது. தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்தப் பகுதிகள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன. இந்த நிலையில் கேட் வால்வு பகுதிகளின் உயரத்தை குறைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேனி கோட்ட பொறியாளர் சுவாமிநாதன், போடி கோட்ட பொறி யாளர் தங்கராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கேட்வால்வு சமப்படுத்தும் பணிகள், டிவைடர் அமைப்புகள், கால்வாய்கள் மீது அமைக்கப்பட்டுள்ள பாலங்கள், போடி மேல சொக்கநாதபுரம் விலக்கு பிரிவு அரசு பொறியியல் கல்லூரி சாலை யில் மாற்றி அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் ஆகியவற்றை பார்வை யிட்டு ஆய்வு செய்து ஆலோசனை செய்தனர். மேலும் 20 மின்கம்பங்கள் மற்றும் 7 டிரான்ஸ்பார்மர்களை சாலை ஓரத்திற்கு மாற்றி அமைக்கும் பணிகளை விரைவாக செய்து முடிப்பது குறித்தும் தேனி கோட்ட பொறியாளர் சுவாமிநாதன், போடி கோட்ட பொறியாளர் தங்கராஜ் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அதற்கான பணிகளும் விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post போடி-தேவாரம் சாலையில் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் கேட்வால்வு சமப்படுத்தும் பணி: நெடுஞ்சாலை துறையினர் தீவிரம் appeared first on Dinakaran.