×
Saravana Stores

பூஞ்ச் தீவிரவாத தாக்குதல் பற்றி கருத்து; முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை

சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் கூறிய கருத்துக்கள் தேர்தல் நடத்தை வீதிமீறல் என்று கூறி தேர்தல் ஆணையத்துக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதி உள்ளார். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய விமானப்படை வீரர்களின் கான்வாய் மீது கடந்த 4ம் தேதி தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து பேசிய பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, இது இவை அனைத்தும் நாடகங்கள். தாக்குதல்கள் அல்ல.

தேர்தல் நெருங்கும்போதெல்லாம் பாஜ வெற்றி பெறுவதற்காக இதுபோன்ற நாடகங்கள் அரங்கேறும் என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி இது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில், ஜலந்தர் மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கையின்படி பஞ்சாப் முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரண்ஜித் சிங் பூஞ்ச் தாக்குதல் பற்றி கூறிய கருத்துக்கள் தேர்தல் நடத்தை விதிமீறலாகும். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

The post பூஞ்ச் தீவிரவாத தாக்குதல் பற்றி கருத்து; முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Poonch terror attack ,Chief Minister ,Saranjit Singh ,Election Commission ,Chandigarh ,Chief Electoral Officer ,Chief Minister of ,Punjab ,Saranjit ,Poonch ,attack ,Indian Air Force ,Jammu and Kashmir ,Poonch district ,Dinakaran ,
× RELATED மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை