- ரகுலகந்தி
- சோனியா
- கொள்ளைக்காரன்
- Neru
- ரெக்கரெய்லி
- அமேதி
- புது தில்லி
- ரகுல்கந்தி
- ரெபெரெலி
- ரகுல்கண்டி
- உபி மாநில ரய்பரேலி
- தின மலர்
- நேரு
புதுடெல்லி: நேரு, தாத்தா, பாட்டி, தந்தை, தாய் வரிசையில் ரேபரேலி, அமேதி தொகுதியுடன் 100 ஆண்ட தொடர்பு இருப்பதாக ராகுல்காந்தி உருக்கமாக தெரிவித்து உள்ளார். உபி மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். அங்கு 5ம் கட்டமாக மே 20ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்ட சோனியாகாந்தி தற்போது மாநிலங்களவை எம்பியாக பதவி ஏற்றுள்ளார். இதை தொடர்ந்து சோனியாவும், ராகுலும் இணைந்து அமேதி, ரேபரேலி தொடர்பான படங்களை பார்வையிட்டு 6 நிமிட வீடியோ வெளியிட்டனர்.
அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:
ரேபரேலியும் அமேதியும் எங்களுக்கு வெறும் தொகுதிகள் அல்ல. அவை எங்களின் கர்மபூமி. ஒவ்வொரு மூலையிலும் தலைமுறைகளின் நினைவுகள் உள்ளன. என் அம்மாவுடன் இருக்கும் பழைய புகைப்படங்களைப் பார்க்கும்போது, எனது தந்தை மற்றும் பாட்டியின் நினைவுக்கு வந்தது. இந்த சேவை பாரம்பரியத்தைத் தொடங்கி, நானும் என் அம்மாவும் முன்னெடுத்துச் சென்றோம். 100 ஆண்டுகளுக்கும் மேலான இந்த உறவு, அன்பு மற்றும் நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. அமேதி மற்றும் ரேபரேலி எங்களை அழைக்கும்போதெல்லாம், நாங்கள் அங்கு இருப்போம்.
1921ம் ஆண்டு இப்பகுதியில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் நேரு. எனது தாத்தா பெரோஸ் காந்தி 1952ல் ரேபரேலி எம்.பி.யாக இருந்தார். அவரை தொடர்ந்து இந்திரா காந்தியும், எனது தாயாரும் ரேபரேலி எம்பியானார்கள். ரேபரேலியுடனான உறவு வித்தியாசமானது. குடும்பம், நட்பு, பாசம் போன்றது. எனது தாய் மற்றும் சகோதரியுடன் எனக்கு உள்ள உறவு போல, ரேபரேலியுடன் எனக்கும் அதே உறவு உள்ளது. அங்குள்ள உணவு எனக்கும் பிடிக்கும். என்னைப் பொறுத்தவரை அமேதி மற்றும் ரேபரேலி ஒரே மாதிரியானவை. அமேதி மற்றும் ரேபரேலிக்கு நாங்கள் தேவைப்படும்போதெல்லாம், அங்கு நாங்கள் இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் அரவணைத்தனர்: சோனியா நெகிழ்ச்சி
சோனியாகாந்தி கூறுகையில்,’ நாங்கள் திருமணத்தின் போது அல்லது இறப்புகளின் போது கிராமம் கிராமமாகச் செல்வோம். வெள்ளம் அல்லது வறட்சியின் போது கூட சென்று மக்களைச் சென்றோம். அவர்கள் என்னை உடனடியாக ஏற்றுக்கொண்டார்கள். நான் ஒரு மகள் மற்றும் மருமகள் போன்ற உறவைப் பகிர்ந்து கொண்டேன்’ என்றார்.
The post கொள்ளு தாத்தா நேரு, தாத்தா, பாட்டி, தந்தை, தாய் வரிசையில் ரேபரேலி, அமேதியுடன் 100 ஆண்டு தொடர்பு: சோனியாவுடன் இணைந்து வீடியோ வெளியிட்டு ராகுல்காந்தி உருக்கம் appeared first on Dinakaran.