- திருப்பதி தேவஸ்தானம்
- இலங்கை
- சீத்தேலிய சீதையம்மன் கோயில்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜனாதிபதி
- ஏஜே ஷேகர்
- திருமலை திருப்பதி தேவஸ்தான்
- மகா கும்பாபிஷேகம்
- நுவரெலியா, இலங்கை
- சீத்தேலிய சீதையம்மன் கோயில் கும்பபிசேகம்
சென்னை: இலங்கை நுவரெலியாவில் வரும் 19ம் தேதி சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயம் மஹாகும்பாபிஷேகம் பக்தர்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக தலைவர் ஏ.ஜே.சேகர் 5 ஆயிரம் லட்டுகளை வழங்குகிறார்.
இலங்கை, நுவரெலியாவில் சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் வரும் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதற்கு முன்பாக வரும் 17ம் தேதி வெள்ளிக்கிழமை கிரியாரம்பம் காலை 8 மணி முதல் காலை கர்மாரம்பம், தீர்த்தம், கிரகப் பிரதர்ஷணம், சாந்திகள், பூர்வாங்க கிரியைகள் மாலை கடகஸ்தாபனம், யாக பூஜை ஹோமம், ஸ்தூபி தீப யந்திர பிம்பஸ்தாபனம் நடைபெறுகிறது. வரும் 18ம் தேதி எண்ணெய்க்காப்பு.
அன்றைய தினம் அயோத்தி சரயு நதியில் இருந்து புனித தீர்த்தக் கலசங்களுடன் காலை 7 மணிக்கு பால்குட பவனியும், சுவாமி ஊர்வலமும் நுவரெலியா நகரத்தில் இருந்து சீதையம்மன் ஆலயம் நோக்கி புறப்படும். 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மஹாகும்பாபிஷேகம் நடைபெறும். சீதா தேவியின் கோயில் மகா கும்பாபிஷேகத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், சுமார் 5,000 லட்டுககள் இலங்கைக்கு அனுப்பப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு ஆலோசனை கமிட்டி தலைவர் ஏ.ஜே.சேகர் கலந்து கொள்கிறார்.
The post இலங்கை சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயம் கும்பாபிஷேகத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 5 ஆயிரம் லட்டுகள் appeared first on Dinakaran.