×

ராஜஸ்தான் ராயல்சுக்கு தண்ணி காட்டும் வெற்றி

கவுகாத்தி: ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசன் 65வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. ராஜஸ்தான் அணி இதுவரை 12 ஆட்டங்களில் 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது. அந்த அணி 9 போட்டியில் 8 வெற்றி… 16 புள்ளி என ராஜநடை போட்டு முதலிடம் வகித்ததுடன், அடுத்து ஒரே ஒரு வெற்றி பெற்றால் பிளே ஆப் உறுதி என்ற நிலை இருந்தது. இப்போதும் இருக்கிறது. ஆனால், அடுத்த 3 ஆட்டங்களிலும் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த ராயல்ஸ் அந்த ஒற்றை வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை வென்றாலும் பிளே ஆப் உறுதி. இல்லை… தொடர்ச்சியாக 4வது தோல்வி என்றாலும் கூட, கடைசி லீக் ஆட்டத்தில் முதல் இடத்தில் இருக்கும் கொல்கத்தாவை வீழ்த்தினாலும் முதல் 2 இடங்களில் ஒன்றை உறுதி செய்யலாம். கொல்கத்தாவுக்கு எதிராகவும் தோல்வி என்றால் கூட, மற்ற அணிகளின் செயல்பாட்டை பொறுத்து ராஜஸ்தான் பிளே ஆப் சுற்றில் விளையாடலாம். அப்படி காதை சுற்றி மூக்கைத் தடுவது சஞ்சு சாம்சன் தலைமையிலான ராயல்சுக்கு பெருமை சேர்க்காது என்பதால், ‘ரைட் ராயலாக’ ஜெயிக்கும் முனைப்புடனேயே ஆர்ஆர் வரிந்துகட்டுகிறது.

பஞ்சாப் இதுவரை 12 ஆட்டங்களில் 4 வெற்றி, 8 தோல்வி என 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளதுடன் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பையும் பறிகொடுத்துவிட்டது. இனி பெறும் வெற்றிகள் அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியாக அமைவதுடன், மற்ற அணிகளின் அடுத்த சுற்று வாய்ப்புக்கும் வேட்டு வைக்கும்.
ஒற்றை வெற்றிக்காக ராஜஸ்தானும், ஆறுதல் வெற்றிக்காக பஞ்சாப் அணியும் முட்டி மோதுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

* இரு அணிகளும் 27 முறை மோதியுள்ளதில் ராஜஸ்தான் 16-11 என முன்னிலை வகிக்கிறது.
* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களிலும் ராஜஸ்தான் அணியே 4-1 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
* நடப்புத் தொடரில் ஏப்.13ல் நடந்த 27வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
* அதிகபட்சமாக ராஜஸ்தான் 226, பஞ்சாப் 223 ரன் விளாசி உள்ளன. குறைந்தபட்சமாக பஞ்சாப் 124, ராஜஸ்தான் 112 ரன்னில் சுருண்டுள்ளன.

The post ராஜஸ்தான் ராயல்சுக்கு தண்ணி காட்டும் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Rajasthan Royals ,Gawukathi ,Punjab Kings ,IPL T20 ,Rajasthan ,Dinakaran ,
× RELATED 5 விக்கெட் வித்தியாசத்தில் ராயல்சை வீழ்த்தியது பஞ்சாப்