×
Saravana Stores

பதஞ்சலி நிறுவன நீதிமன்ற அவமதிப்பு; வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: பதஞ்சலி நிறுவத்திற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உரிமம் ரத்து செய்யப்பட்ட பொருட்களை பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்ய தடை விதித்து கடந்த 7ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹீமா கோலி மற்றும் அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,\\” இந்த விவகாரத்தில் வேறு ஏதேனும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளீர்களா?. அல்லது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று நீதிபதிகள் கேட்டனர்.

இதையடுத்து பாபா ராம்தேவ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘பதஞ்சலி நிறுவன விளம்பரங்கள் தொடர்பாக அனைத்து சேனல்களுக்கும் கடிதம் எழுதியுள்ளோம். மேலும் உரிமை ரத்து செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையையும் நிறுத்தி விட்டோம் என்று தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘இந்த விவகாரத்தில் உங்களது தரப்பில் இருந்து செய்தித்தாள்களை மட்டுமே தாக்கல் செய்துள்ளீர்கள். பங்குகள் மற்றும் விற்பனை பற்றிய விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தையும் கொடுக்க வேண்டும்.

இதில் பாபா ராம்தேவ் மற்றும் அவரது குழுமம் ஆகியவை ஒரு பங்களிப்பாகும். ஆனால் பதஞ்சலி தயாரிப்புகள் என்பது வேறு ஒன்றாகும் என்று தெரிவித்த நீதிபதி ஹீமா கோலி,‘‘ இந்த விவகாரம் தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் பிரமாணப் பத்திரம் என்ன ஆனது?. ஏன் அதனை தாக்கல் செய்யவில்லை என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த மருத்துவ சங்கத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்க்கறிஞர், நாங்கள் இதற்காக மன்னிப்பு தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார். இதையடுத்து நீதிபதிகள். ‘‘இந்த அவமதிப்பு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கிறோம். இருப்பினும் விளக்கங்கள் அனைத்தையும் 2 வாரத்தில் பிரமாணப் பத்திரமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். நேற்றைய விசாரணையின் போதும் பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தனர்.

The post பதஞ்சலி நிறுவன நீதிமன்ற அவமதிப்பு; வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Patanjali ,New Delhi ,Supreme Court ,Patanjali Company ,Dinakaran ,
× RELATED மதுஆலை உற்பத்தி கொள்கை மாநில...