பீஜிங்: ரஷ்ய அதிபர் புடின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக சீனா செல்ல உள்ளார். ரஷ்யா அதிபராக விளாடிமிர் புடின் கடந்த வாரம் 5ம் முறையாக பதவி ஏற்றார். இந்நிலையில் சீனாவுக்கு வருகை தரும்படி புதினுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் தொலைபேசி மூலம் புதினுக்கு அழைப்பு விடுத்தார். இதுகுறித்து கிரெம்ளின் மாளிகை வௌியிட்டுள்ள அறிவிப்பில், “சீன அதிபரின் அழை ப்பை ஏற்று புடின் நாளையும், நாளை மறுநாளும் சீனா செல்ல உள்ளார்.
அங்கு சீன தலைவர் ஜி ஜின் பிங்கை சந்திக்க உள்ளார். ரஷ்ய அதிபராக 5ம் முறை பதவி ஏற்ற பிறகு புடின் செல்லும் முதல் வௌிநாட்டு பயணம் இது” என்று தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின்போது, உக்ரைன் போர், இஸ்ரேல் – காசா போர் உள்பட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் பற்றி இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
The post 5ம் முறை அதிபரான பின் ரஷ்ய அதிபர் புடின் 2 நாள் சீனா பயணம் appeared first on Dinakaran.