×

மாப்பிள்ளையூரணி சுகாதார நிலையத்தில் செவிலியர் தினம் கொண்டாட்டம்

தூத்துக்குடி, மே 15: தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிள்ளையூணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் உலக செவிலியர் தினவிழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சியின் நகரச் செயலாளர் ராஜா தலைமையில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் ஒன்றியச் செயலாளர் சுடலை சிவக்குமார், நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், சந்தனம், கருப்பசாமி, மாரிமுத்து, தவபுத்திரன், நாகூர் கனி, செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post மாப்பிள்ளையூரணி சுகாதார நிலையத்தில் செவிலியர் தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Nurses Day ,Mampilaiurani Health Center ,Thoothukudi ,Thoothukudi Loratsi Union ,World Nurses' Day ,People's Justice Mayam Party ,Maplaiuni Primary Health Centre ,Raja ,Day ,Mampilaiurani ,Health Center ,
× RELATED தூத்துக்குடியில் மீனவர் பைக் எரிப்பு