×

தச்சன்விளையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த இருவர் கைது

சாத்தான்குளம், மே15: தச்சன்விளையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். தட்டார்மடம் எஸ்.ஐ. பொன்னுமுனியசாமி மற்றும் போலீசார் முத்துராமன், கண்ணன் ஆகியோர் ரோந்து சென்றனர். தச்சன்விளை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அங்கு நின்றுகொண்டிருந்த தச்சன்விளை அம்ணாநகரை சேர்ந்த பால்சாமியின் மகன் ராமச்சந்திரன் (41), ராமச்சந்திரனின் மகன் சந்தோஷ்குமார் (19) ஆகிய இருவரும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ஆபாச வார்த்தைகளால் பேசிக்கொண்டிருந்தனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கண்டித்தபோதும் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

The post தச்சன்விளையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thachanvilai ,Chatankulam ,Thattarmadam ,S.I. Ponnumuniaswamy ,Muthuraman ,Kannan ,Dachanvilai ,Amnanagar ,
× RELATED மனைவியை கழுத்தை அறுத்து கொன்று கணவன் தற்கொலை