×

பீகார் முன்னாள் துணை முதல்வர் மரணம்

பாட்னா: பீகார் மாநில பாஜ மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி (72), கடந்த 6 மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். நேற்று மாலை பாட்னாவில் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடந்தது.

The post பீகார் முன்னாள் துணை முதல்வர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Former ,Deputy Chief Minister ,Bihar ,Patna ,BJP ,Sushil Kumar Modi ,Delhi ,AIIMS hospital ,chief minister ,
× RELATED நிதிஷை நீக்கும் வரை முடி...