×

திருவேங்கடத்தில் கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவேங்கடம், மே 15: திருவேங்கடத்தில் திடீரென பெய்த கோடைமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவேங்கடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் கோடை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அஞ்சினர். இருப்பினும் பணி நிமித்தம் காரணமாக வெளியில் நடமாடி வந்தனர். கடும் வெப்பத்தால் பலருக்கு மயக்கம், தலைவலி போன்ற பல்வேறு உடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் திடீரென திருவேங்கடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. மூன்று மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது மழை பெய்தது. தொடர்ந்து திருவேங்கடம் பகுதியில் நேற்றும் மழை ெபய்ததால் இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post திருவேங்கடத்தில் கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thiruvengadam ,Thiruvengada ,Thiruvangadam ,
× RELATED கலைவாணி மெட்ரிக் பள்ளி பிளஸ்1 தேர்வில் 100% தேர்ச்சி