×

காதலனுக்கு திருமணம் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

தர்மபுரி, மே 15: தர்மபுரி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீத்தாராமன். இவரது மனைவி மேனகா. இவர்களது மகள் கோபிகா (19), இவர் பிளஸ்2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில், கோபிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலையில் பெற்றோர் வீடு திரும்பியபோது, கோபிகா தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு திடுக்கிட்டு கதறி அழுனர். தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து, கோபிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், கோபிகா ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவருக்கு வேறு பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது, முதல் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட கோபிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதலனுக்கு திருமணம் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Sitharaman ,Dharmapuri MGR Nagar ,Maneka ,Gopika ,
× RELATED மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்