×

பெண் எம்.பியை தாக்கியவர் மீது கடும் நடவடிக்கை ஆம் ஆத்மி உறுதி

புதுடெல்லி: ஆம்ஆத்மி எம்பி சுவாதி மாலிவாலை முதல்வர் இல்லத்தில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாக கூறப்படுவது பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பி.யுமான சஞ்சய் சிங் எம்பி நேற்று அளித்த பேட்டியில், ‘ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மாலிவால் நேற்று (நேற்று முன்தினம்) முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றிருந்தார்.

அப்போது அவர் அங்கிருந்த அறையில் காத்திருந்தபோது பிபவ் குமார் அவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் கெஜ்ரிவால் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

The post பெண் எம்.பியை தாக்கியவர் மீது கடும் நடவடிக்கை ஆம் ஆத்மி உறுதி appeared first on Dinakaran.

Tags : Aam Aadmi Party ,New Delhi ,Swati Maliwal ,Kejriwal ,Bibhav Kumar ,Rajya Sabha ,Sanjay Singh ,MP… ,
× RELATED கொரோனா விதிமுறை மீறல் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சரண்