×

கலைஞர் நூலகத்தில் ‘மரம் அறிவோம்’ நிகழ்ச்சி

மதுரை, மே 15: கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் நேற்று ‘மரம் அறிவோம்’ நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மே 1ல் துவங்கி நடைபெற்று வருகிறது. மே 31 வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கான பல்வேறு பயிற்சிகள், விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நூலகத்தில் நேற்று (மே 14) மரம் அறிவோம் நிகழ்ச்சி நடந்தது. மரங்களால் அடையும் பயன்களுடன், மரம் வளர்த்தால் மழை பெறலாம் உள்ளிட்ட பலதரப்பட்ட சிறப்புகள் குறித்தும் செய்முறை விளக்கத்துடன் சிவராமன் விளக்கினார். தொடர்ந்து இன்று (மே 15) சிறுவர்களும் துள்ளலிசையும், மே 16ல் சாக்பீஸ் ஓவியம் துவங்கி, மே 30ல் விளையாட்டு கல்வியில் யோகாவின் பங்கு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

The post கலைஞர் நூலகத்தில் ‘மரம் அறிவோம்’ நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Artist Library ,Madurai ,Artist Centenary Library ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி