×

விசாரணை முடிந்து யூடியூபர் சங்கர் மீண்டும் சிறையில் அடைப்பு; ஜாமீன் மனு ஒத்திவைப்பு

கோவை: பெண் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் யூ டியூபர் சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கோவை நீதிமன்ற அனுமதியுடன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் சங்கரை நேற்று முன்தினம் காவலில் எடுத்து பெண் போலீஸ் குறித்து ஆபாசமாக எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பேசினார்? என்று விசாரித்தனர். அதற்கு சங்கர் அளித்த பதில்களை போலீசார் பதிவு செய்தனர். நேற்று மாலை காவல் விசாரணை முடிவடைந்ததையடுத்து சங்கரை போலீசார் கோவை ஜேஎம்-4 கோர்ட்டில் நீதிபதி சரவணபாபு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். இதற்கிடையே சங்கரின் ஜாமீன் மனு தொடர்பான விசாரணை கோவை ஜேஎம்-4 கோர்ட்டில் நடந்தது.‌ ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post விசாரணை முடிந்து யூடியூபர் சங்கர் மீண்டும் சிறையில் அடைப்பு; ஜாமீன் மனு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : YouTuber ,Shankar ,Goa ,Shankar Goa ,Municipal Cybercrime Police ,Goa Municipal Cyber Crime Police Department ,
× RELATED யூ டியூபர் சங்கர் பெலிக்சுக்கு குற்றப்பத்திரிகை நகல்