×

நிர்வாக ரீதியாக பள்ளிகள் தேர்ச்சி சதவீதம்

சென்னை: பல்வேறு நிர்வாகங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளின் பிளஸ் 1 வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறித்த விவரம்:
* அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 லட்சத்து 91,642 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். அவர்களில் 1 லட்சத்து 77,006 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 92.36 சதவீதம்.
* அரசுப் பள்ளிகளின் மூலம் 3 லட்சத்து 66,009 பேர் தேர்வு எழுதி, 3 லட்சத்து 13,865 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சிவீதம் 85.75%.
* தனியார் பள்ளிகளின் மூலம் 2 லட்சத்து 53 ,521 பேர் தேர்வு எழுதி, 2 லட்சத்து 48,668 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 98.09%.
* ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் மூலம் 4124 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 3470 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சிவீதம் 84.14%.
* மாகராட்சிப் பள்ளிகளின் மூலம் 10 ஆயிரத்து 162 பேர் தேர்வு எழுதி, 8608 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 84.71%.
* வனத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் படித்த 171 பேர் தேர்வு எழுதியதில், 150 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 87.72%.
* கள்ளர் நலத்துறை பள்ளிகள் மூலம் 1778 பேர் தேர்வு எழுதி, 1629 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 91.62%.
* நகராட்சிப் பள்ளிகளில் 7713 பேர் தேர்வு எழுதி 6621 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 85.84%.
* சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 301 பேர் தேர்வு எழுதி, 282 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 93.69%.
* மலைவாழ் மக்கள் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 1590 பேர் தேர்வு எழுதியதில் 1428 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 89.81%.

* தேர்வு முடிவுகளை வெளியிடும் அதிகாரிகள் சென்னையில் நேற்று பிளஸ் 1 வகுப்பு தேர்வு
முடிவுகளை வெளியிடும் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா. உடன் மேல்நிலை கல்வி இணை இயக்குனர் செல்வக்குமார், இடைநிலை கல்வி இண இயக்குனர் நரேஷ்.

ஜூலை 2ல் பிளஸ் 1 துணைத்தேர்வு
* கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்த பிளஸ் 1 தேர்வில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 220 பேர் பதிவு செய்து இருந்த நிலையில், தேர்வின்போது 9049 பேர் தேர்வு எழுத வரவில்லை.
* தனித் தேர்வர்கள் 4941 பேர் பதிவு செய்திருந்தநிலையில் 414 பேர் தேர்வு எழுத வரவில்லை.
* கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டின் தேர்ச்சி வீதம் 0.24 சதவீதம் உயர்ந்துள்ளது.
* பிளஸ்1 தேர்வுக்கு வராத, தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பிளஸ்1 துணைத்தேர்வு ஜூலை 2முதல் நடத்த தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. இந்ததேர்வுக்கான கால அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
* பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 17ம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளிலும் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
n பிளஸ்1 தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டல் செய்யவும் இன்று முதல் 20ம் தேதி வரை தாங்கள் படித்த பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

The post நிர்வாக ரீதியாக பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்