சென்னை: இம்மாதம் 6ம் தேதி தொடங்கிய பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவில் இதுவரை 1,31,050 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 6ம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டு 50 ஆயிரம் விண்ணப்ப பதிவுகளை பெற 6 நாட்கள் ஆனது. இந்த முறை ஒரே வாரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். தொடா்ந்து ஒவ்வொரு நாளும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பப் பதிவு தொடங்கி 9வது நாளான நேற்று மாலை வரை நிலவரப்படி 1 லட்சத்து 31 ஆயிரத்து 50 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 80 ஆயிரத்து 955 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும், 46 ஆயிரத்து 528 பேர் சான்றிதழ்கள் பதிவேற்றமும் செய்துள்ளனர். வரும் நாட்களில் விண்ணப்பப் பதிவு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tneaonline.org எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வருகிறார்கள். வரும் ஜூன் 6ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவு பெறுகிறது.
The post பி.இ. மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.