×
Saravana Stores

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி: சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை.! பிரமாணப்பத்திரத்தில் தகவல்

டெல்லி: பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடியாக உள்ளது. வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுவுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப்பத்திரத்தையும் மோடி தாக்கல் செய்துள்ளார். இதில் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடியாக உள்ளது. அவருக்கு சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை. குற்ற வழக்குகள் எதுவும் இல்லை. மோடியின் பிரதான வருமானமாக அவருக்கு அளிக்கப்படும் சம்பளமே உள்ளது.

மோடியிடம் 4 தங்க மோதிரங்கள் உள்ளன. அந்த மோதிரங்களின் மதிப்பு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் ஆகும். மோடியிடம் ரொக்கமாக ரூ.52 ஆயிரம் 920 உள்ளது. பிரதமர் மோடி தனது வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாக ரூ.2.85 கோடி டெபாசிட் செய்துள்ளார். வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்! முன்மொழிந்த 4 பேர் யார் தெரியுமா எவ்வளவு உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி கடந்த 1978 ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்துள்ளார். 1983 ஆம் ஆண்டில் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு 1.64 கோடியாக இருந்தது.

2019-ல் ரூ.2.51 கோடியாக இருந்தது. தற்போது ரூ.3.02 கோடியாக உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளில் மோடியின் சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் மட்டுமே உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் கடைசி கட்ட தேர்தலில் உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. வாரணாசி தொகுதியில் கடந்த முறையை போல இந்த தேர்தலிலும் மோடியே போட்டியிடுகிறார். வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்காக மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

The post பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி: சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை.! பிரமாணப்பத்திரத்தில் தகவல் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Modi ,Varanasi ,Dinakaran ,
× RELATED நாட்டின் இளைஞர்களுக்கு அதிகபட்ச...