×
Saravana Stores

சித்திரை திருவிழா 7ம் நாள்; சுசீந்திரம் கோயிலில் பல்லக்கில் சுவாமி வீதி உலா

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் சித்திரை தெப்பத்திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலா காட்சிகள் நடக்கின்றன. இன்று (14ம்தேதி) 7ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை பல்லக்கில் சுவாமி வீதி உலா காட்சிகள் வந்தன. இன்று மாலை 5 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமிக்கு அஷ்டாபிஷேம், இரவு 9.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடக்கிறது. நாளை (புதன்) 8ம் திருவிழாவையொட்டி, காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதியுலா, மாலை 4 மணிக்கு நடராஜ பெருமாள், சிவகாமி அம்பாளுக்கு அஷ்டாபிஷேகம், இரவு 9.30 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி, அம்பாள் திருவீதியுலா நடக்கிறது.

9ம் திருவிழாவான 16ம்தேதி (வியாழன்) காலை 6 மணிக்கு இந்திர வாகனத்தில் மகாவிஷ்ணு, அம்பாள் திருவீதியுலா நடக்கிறது. பின்னர் காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் முதல் தேரில் விநாயகர், அம்மன் தேரில் சுவாமி மற்றும் அம்பாள், இந்திரன் தேரில் அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதியுலா, இரவு 12 மணிக்கு சப்தாவர்ணம் நடக்கிறது. 10ம் திருவிழாவான 17ம்தேதி (வெள்ளி) மாலை 6 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 8.30 மணியளவில் தெப்பக்குளத்ததில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் எழுந்தருளி 3 முறை சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு திரு ஆறாட்டு நடக்கிறது.

The post சித்திரை திருவிழா 7ம் நாள்; சுசீந்திரம் கோயிலில் பல்லக்கில் சுவாமி வீதி உலா appeared first on Dinakaran.

Tags : Chitra Festival ,Swami Road ,Susindram ,Nagercoil ,Chitrai Theppatri Festival ,Suchindram ,Thanumalaya Swamy Temple ,Kumari District ,Swami Vethi Ula ,Chitrai Festival ,Swami Veethi Ula ,Suchindram Temple ,
× RELATED சுசீந்திரம் அருகே பழையாற்றில் ஆகாய...