×

லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுடன் கே.எல்.ராகுல் சந்திப்பு!

லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுடன் அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் சந்தித்தார். SRH அணியுடனான தோல்விக்குப் பிறகு, கோயங்கா, ராகுல் இடையேயான விவாதம் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது. 17-வது ஐ.பி.எல். தொடர், கடந்த 8-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்றது. லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ அணி 166 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர், களமிறங்கிய அபிஷேக் ஷர்மா (75 ரன்கள், 28 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), டிராவிஸ் ஹெட் (89 ரன்கள், 30 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் ஐதராபாத் அணி 9.4 ஓவர்களிலேயே அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா, மைதானத்திலேயே அணியின் கேப்டன் ராகுலிடம் ஆக்ரோஷமாக விவாதித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனால் விரக்தி அடைந்த ராகுல் லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், லக்னோ அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது கே.எல். ராகுல் மற்றும் சஞ்சீவ் கோயங்கா ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பரஸ்பரம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

The post லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுடன் கே.எல்.ராகுல் சந்திப்பு! appeared first on Dinakaran.

Tags : KL Rahul ,Lucknow ,Sanjeev Goenka ,Goenka ,Rahul ,SRH ,17th IPL ,Hyderabad ,Dinakaran ,
× RELATED கர்ப்ப காலத்தில் முடியை உண்ணும்...