சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக சரிந்துள்ள நிலையில், இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேட்டூர் அணையில் வளர்க்கக்கூடிய மீன்களை 2000 மேற்பட்ட மீனவர்கள் உரிமை பெற்று மீன்களை பிடித்து விற்பனை செய்வது வருகின்றனர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கக்கூடிய காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் பரிசல் மூலமாக அள்ளிச் செல்கின்றனர். மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக சரிந்திருக்கக்கூடிய நிலையில் சிரியவகை மீன்கள் செத்து கரை ஒதுங்கியது.
1 கிலோ முதல் 10 கிலோ வரை கெளுத்தி, வாலை மீன்கள் மயங்கி கிடைக்கக்கூடிய நிலையிலும் மீனவர்கள் மீன்களை எடுத்து செல்கின்றனர். இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு கேட்ட போது மேட்டூர் அணையில் ரசாயன கழிவு கலப்பதன் காரணமாக மீன்கள் செத்து மிதக்கின்றன அல்லது ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக சுவாச கோளாறு ஏற்பட்டு மீன்கள் செத்து மிதக்கின்றன என்பது குறித்து நீரின் மாதிரிகளையும், செத்து மிதந்த மீன்களையும் ஆய்வுக்காக நாங்கள் எடுத்து சென்றிருக்கிறோம். ஆய்வின் முடிவின் அடிப்படையில் அதுகுறித்ததான தகவல்கள் தெரியவரும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக மேட்டூர் அணைக்கு சென்று எங்கெல்லாம் மீன்கள் செத்து மிதக்கிறதோ அங்கெல்லாம் சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள் ஆய்வுகளின் முடிவின் அடிப்படையில் தகவல் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
The post மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக சரிந்துள்ள நிலையில், இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்: அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.