×

ஏப்ரலில் சில்லரை விலைவாசி உயர்வு 4.83%ஆக சரிவு: ஒன்றிய புள்ளியில் துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: சில்லறை விலைகள் அடிப்படையிலான விலைவாசி உயர்வு ஏப்ரலில் 4.83% குறைந்துள்ளது. கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை விலைவாசி உயர்வு ஏப்ரலில் குறைந்துள்ளதாக ஒன்றிய புள்ளியில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலையில் 7.4% உச்சம் அடைந்த சில்லறை விலைவாசி உயர்வு விகிதம் ஜனவரியில் 5.1%ஆக சரிந்து, மார்ச்சில் 4.9%ஆக குறைந்து, ஏப்ரலில் 4.83%ஆக சரிந்துள்ளது.

ஆனால் உணவு பொருட்கள் விலைவாசி உயர்வு மார்ச்சில் 7.7ஆக இருந்து, ஏப்ரலில் 7.9%ஆக அதிகரித்துள்ளது. காய்கறிகள் விலை உயர்வு 27.8%ஆகவும், பருப்பு ரகங்களின் விலை உயர்வு 16.8% ஆகவும், மாமிசம் மற்றும் மீன் விலை உயர்வு 8.2% ஆகவும் ஏப்ரலில் அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள் விலை உயர்வு விகிதம் அதிகளவில் தொடர்வதால் சில்லறை விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். சில்லறை விலைவாசி உயர்வு ஒடிசாவில் அதிகபட்சமாக 7.11%ஆக உள்ளது. தமிழகத்தில் 4.93%ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post ஏப்ரலில் சில்லரை விலைவாசி உயர்வு 4.83%ஆக சரிவு: ஒன்றிய புள்ளியில் துறை அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ministry of Industry ,Union Point Delhi ,Union Point Ministry ,Union point information ,Dinakaran ,
× RELATED மொத்த விலை பணவீக்க விகிதம் குறைந்தது