டெல்லி: டெல்லியில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 4 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஜி.டி.டி, தாதா மருத்துவமனை அதேபோல் தீபக் சந்த் உள்ளிட்ட 4 மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
பின்னர் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை நடைபெற்று வருவதாகவும், இதுவரை சந்தேகத்திற்கு இடமாக மர்ம பொருள் ஏதும் கண்டுபிடிக்கவில்லை என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மிரட்டல் கடிதம் அனுப்பிய நபரை கண்டு பிடிக்க டெல்லி போலீசாரும் அந்த மருத்துவமனைக்கு சென்று விசாரணை தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை 20 மருத்துவமனைகள், விமான நிலையம் மற்றும் டெல்லியில் உள்ள வடக்கு ரயில்வே டிடிஆர் அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. ஆனால் அதற்கு பிறகு இச்சம்பவம் புரளி என தெரிவிக்கப்பட்டது. அதே போல் மே 1ம் தேதி டெல்லி அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் 150 பள்ளிகளுக்கு இது போல மிரட்டல் மின்னஞ்சல் வந்தது.
அதற்கு பிறகும் புரளி என உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் கண்ணா மூத்த அதிகாரிகளுடன் ஒரு ஆய்வு கூட்டத்தை நடத்தினார் அப்போது பள்ளிகளில் சிசிடிவியை கண்காணிப்பது மற்றும் மின்னஞ்சலை தொடர்ந்து கண்காணிக்குமாறு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். தற்போது இந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்ற கோர்டை வைத்து யார் இதை அனுப்பியிருப்பார் என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post டெல்லியில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.