- எக்மோர் நீதிமன்றம்
- பாஜக
- வினோஜ் பி.செல்வம்
- தயாநிதி மாறன்
- சென்னை
- தயானிதி மாறன்
- வினோஜ் பி.செல்வம்
- திமுக
- தின மலர்
சென்னை: தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஜூன் 6-ல் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வினோஜ் பி.செல்வம் ஜூன் 6-ம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக எம்பியும், மத்திய சென்னை திமுக வேட்பாளருமான தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியில் தயாநிதி மாறன் எதுவும் பயன்படுத்தவில்லை என வினோஜ் பி.செல்வம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
கடந்த மாதம் ஏப்ரல் 13ம் தேதி, வினோஜ் பி.செல்வம் சமூக வலைளத்தளத்தில் பதிவிட்டிருந்த நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வினோஜ் பி.செல்வம் கருத்து பதவிட்டதாக தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், வினோஜ் வரும் ஜூன் 6ம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாநிதி மாறன் எம்.பி. தொடர்ந்த அவதூறு வழக்கில் வினோஜ் பி.செல்வம் இன்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. வினோஜ் பி.செல்வம் இன்று ஆஜராகாததால் வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
The post தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஜூன் 6ம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.