×

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ஜூன் 27-க்கு ஒத்திவைப்பு!

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ஜூன் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். மக்களவை தேர்தல் பரப்புரையின்போது தன்னை பற்றி பழனிசாமி அவதூறாக பேசியதாக தயாநிதி மாறன் எம்.பி. வழக்கு தொடர்ந்தார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கடந்த மாதம் 15-ம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில் “நம்மை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் நபர் தயாநிதி மாறன் தனது சொந்த நலனுக்காகப் போட்டியிடுகிறார்.

எம்பியாக உள்ள அவர், தனது நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியில் சுமார் 75 சதவீத நிதியைச் செலவே செய்யவில்லை” என்று கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சுக்கு எதிராகத் தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். உண்மைத் தன்மையை ஆராயாமல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார் என்றும் இது உண்மைக்குப் புறம்பானது என்றும் மக்கள் மத்தியில் தனக்கு உள்ள நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

எந்த ஆதாரங்களும் இல்லாமல் என்மீது அவதூறு பரப்பியுள்ளார். பொது மக்களுக்கு சேவை செய்வதையே முழுநேர பணியாக கொண்டு செயல்படும் என்மீது தொகுதி மக்களிடமும், தமிழக மக்களிடமும் உள்ள நற்பெயரைக்கெடுக்கும் வகையில் எடப்பாடி பேசியுள்ளார் என்றும் அவர் அதில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

The post எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ஜூன் 27-க்கு ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Tags : Edapadi Palanisami ,Dayaniti Maran ,Chennai ,EDAPPADI PALANISAMI ,RAMAMPUR COURT ,Palanisami ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வலுவாக...