டெல்லி: மகாலட்சுமி யோஜனா ஏழைக் குடும்பங்களின் உயிர்நாடியாக மாறப் போகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில் மகாலட்சுமி யோஜனா ஏழைக் குடும்பங்களின் உயிர்நாடியாக மாறப் போகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்; பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்காக நாட்டையே அவதிக்குள்ளாக்கினார், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக வரிசையில் நின்று அவர்களை கதறி அழ வைத்தார், போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்களை நீதிமன்ற வரிசைகளில் நிக்க வைத்தார் நரேந்திர மோடி. காங்கிரஸ் அவர்களை ஒரே வரியில் – 1 லட்சம் வரிசையில் நிறுத்தும். ஒவ்வொரு ஏழைப் பெண்ணும் நிற்க ஆவலுடன் காத்திருக்கும் ஒரு வரிசை. மஹாலக்ஷ்மி யோஜனா ஏழைக் குடும்பங்களின் உயிர்நாடியாக மாறப் போகிறது.
The post மகாலட்சுமி யோஜனா ஏழைக் குடும்பங்களின் உயிர்நாடியாக மாறப் போகிறது: ராகுல் காந்தி appeared first on Dinakaran.