- நாகை
- எம்பி செல்வரசு
- திருவாரூர்
- நாகை எம். பி. செல்வரசு
- நாகப்பட்டினம் லோக்சபா தொகுதி
- கம்யூனிஸ்ட்
- எம். செல்வரசு
- கோவில் சித்தமல்லி
- மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்
- இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகக்
- எம். பி. செல்வரசு
திருவாரூர்: நாகை எம்.பி. செல்வராசுவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நாகப்பட்டினம் மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராசு (67). திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோவில் சித்தமல்லியை சேர்ந்த இவர் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவருக்கு சிறுநீரக தொற்றும் இருந்து வந்தது. ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மூச்சுத்திணறல் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் நுரையீரல் தொற்று பாதிப்புக்காக கடந்த 2ம் தேதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை 2.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். பின்னர் சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோவில் சித்தமல்லிக்கு செல்வராசு உடல் நேற்று மதியம் 12.45 மணிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது இல்லத்தில் நேற்று வைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முன்னணி தலைவர்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, அவரது இல்லத்தின் அருகே உடல் அடக்கம் நடைபெற்றது. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடைபெற்றது. இந்த அரசு மரியாதை வழங்கும் நிகழ்வு திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார், மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
The post நாகை எம்.பி. செல்வராசுவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் appeared first on Dinakaran.