×
Saravana Stores

பாஜக ஆட்சியை காட்டிலும் காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் வறுமை வெகுவாக குறைந்தது : ப.சிதம்பரம்

சென்னை : பாஜக ஆட்சியை காட்டிலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இந்தியாவின் வறுமை வெகுவாக குறைந்தது புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளதாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வறுமை விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக சுட்டிக் காட்டி பிரபல நாளிதழில் பொருளாதார நிபுணர்கள் சி.ரங்கராஜன், மஹேந்த்ர தேவ் ஆகியோர் இணைந்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வறுமை தொடர்பான பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளை அவர்கள் மேற்கோள் காட்டி உள்ளனர்.

இதனை சுட்டிக் காட்டி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டு வரை இந்தியாவில் வறுமை கணிசமாக குறைந்துள்ளதாக காங்கிரஸ் ஆட்சியிலேயே அதன் சதவீதம் அதிகம் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனைகளே சிறந்தவை என கூறுபவர்களுக்கு இந்த புள்ளி விவரங்களே சிறந்த பதில் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி விகித வளர்ச்சி வேகமாக உள்ளதாகவும் வேலை வாய்ப்புகள் அதிகம் இருந்ததுமே வறுமை குறைய காரணம் என ப.சிதம்பரம் சுட்டிக் காட்டி உள்ளார்.

The post பாஜக ஆட்சியை காட்டிலும் காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் வறுமை வெகுவாக குறைந்தது : ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : India ,Congress ,BJP ,P. Chidambaram ,Chennai ,Former Union Minister ,Congress party ,
× RELATED மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணிக்கு கெஜ்ரிவால் பிரசாரம்