×
Saravana Stores

அடிப்படை வசதி இல்லாததால் புதிய ஹாடா கிராம குடியிருப்பு பகுதி மக்கள் அவதி

கோத்தகிரி : நடுஹட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட புது ஹாடா பகுதியில் பல ஆண்டுகளாக எவ்விதமான அடிப்படை வசதிகளும் இன்றி கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுகாவில் நடுஹட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட வெஸ்ட் புரூக் புதிய ஹாடா கிராமத்தில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது.
இங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கக்கூடிய மக்கள் அன்றாட கூலி வேலை செய்து வருகின்றனர்.

இங்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மயானம் வசதி, கழிவுநீர் வசதி, எரியாத தெரு விளக்குகள் என எந்த அடிப்படை வசதிகள் ஏதுவும் இன்றி பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றம் உட்பட அனைத்துத்துறை அலுவலங்களிலும் தங்களின் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

The post அடிப்படை வசதி இல்லாததால் புதிய ஹாடா கிராம குடியிருப்பு பகுதி மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : new Hata village ,Kothagiri ,Pudu Hada ,Naduhatty Panchayat Council ,West Brook ,Naduhatty ,Panchayat ,Kotagiri Taluk, Nilgiri District ,New Hada village ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி அருகே பரிதாபம் யானை தாக்கி பழங்குடியின கூலி தொழிலாளி பலி