- நாகப்பட்டினம் மாவட்டம்
- நாகப்பட்டினம்
- வேளாங்கண்ணி
- நல்லூர்
- பூவைத்தேடி
- காமேஸ்வரம்
- வலேடமாவடி
- புதுப்பள்ளி
*வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாங்காய் சீசன் தொடங்கியுள்ளது.நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்து வருகின்றனர்.
குறிப்பாக வேளாங்கண்ணி, தெற்குபொய்கை நல்லூர், பூவைத்தேடி காமேஸ்வரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, புஷ்பவனம், நாலுவேதபதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரதான தொழிலாக மா சாகுபடி நடந்து வருகிறது. இப்பகுதிகளில் பங்கனப்பள்ளி, ஒட்டு, ருமேனியா, செந்தூரா, நீளம், காலபாடு உள்ளிட்ட பல்வேறு வகையான மாங்காய்கள் நல்ல விளைச்சல் அடைந்துள்ளது.
இங்கு காய்க்கும் மாங்கனிகள் அதிக சுவையாக இருப்பதால் கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் குளிர்பானம் தயார் செய்யும் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வாங்கி செல்வார்கள். இந்நிலையில் கஜா புயல் தாக்கத்திற்கு பின்னர் தனியார் நிறுவனங்கள் மாம்பழத்தை கொள்முதல் செய்ய வருவது இல்லை. இதனால் மா விவசாயிகள் பொருளாதாரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
நடப்பு ஆண்டில் மா நல்ல விளைச்சல் அடைந்துள்ள நிலையில் அதை உரிய விலை கொடுத்து வாங்க தனியார் நிறுவனங்கள் முன்வரவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே அரசு இப்பகுதியில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைத்து மாங்காய்களை அரசே கொள்முதல் செய்து உரிய விலையை நிர்ணம் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் ருசி மிகுந்த மாம்பழங்கள் சீசன் துவக்கம் appeared first on Dinakaran.