- பழனி
- சென்னை எழும்பூர் குடும்ப மருத்துவ பயிற்சி மையம்
- சென்னை
- முதல்வர்
- குடும்ப நல மருத்துவ பயிற்சி மையம்
- எழும்பூர்
சென்னை: சென்னை எழும்பூர் குடும்ப நல மருத்துவ பயிற்சி மையத்தின் முதல்வர் பழனி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எழும்பூரில் குடும்பநல மருத்துவ பயிற்சி மையத்தில் முதல்வராக உள்ள பழனி என்பவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பழனி என்பவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுகாதாரப்பணித்துறை இயக்குனராக பணி புரிந்து வந்தவர். இவர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் அடிப்படையில் இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது.
புகாரின் அடிப்படையில் பல்வேறு கட்டமாக சோதனை நடைபெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் தொடர்ந்து இவரது வீட்டில் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவரது வங்கி சார்ந்த கணக்குகளை முதற்கட்டமாக முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post சென்னை எழும்பூர் குடும்ப நல மருத்துவ பயிற்சி மையத்தின் முதல்வர் பழனி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை..!! appeared first on Dinakaran.