சென்னை: சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் கத்தரி வெயில் தொடங்கி 28ம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்தக் கத்தரி வெயில் நீடிக்க உள்ளது. இத்தகைய சூழலில் கட்டட பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அதிக வெப்ப அலை காரணமாக ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக காலை 10 முதல் மாலை 4 வரை அனைத்து வகை திறந்தவெளி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வெப்பம் காரணமாக தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை என தொழிலக பாதுகாப்பு இயக்ககம் தெரிவித்துள்ளது. விதிமுறைகள் கட்டுமான நிறுவனங்கள் பின்பற்றுகின்றனவா என்று சென்னை, மதுரையின் இணை இயக்குனர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திறந்தவெளி கட்டுமானத்துக்கான கட்டுப்பாடு மே இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post வெயில் பாதிப்பு எதிரொலி.. திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு..!! appeared first on Dinakaran.