×
Saravana Stores

வெளியானது 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. 91.17% மாணவர்கள் தேர்ச்சி… கோவை மாவட்டம் முதலிடம்!!

சென்னை : தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. www.tnresult.nic.in, www.dge.tn.gov.in தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தேர்வு நடைபெற்ற நாட்கள் – 04.03.2024 5 25.03.2024
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் – 14.05.2024
தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை – 8,11,172
மாணவியர்களின் எண்ணிக்கை – 4,26,821
மாணவர்களின் எண்ணிக்கை : 3,84,351

தேர்ச்சி விவரங்கள்

தேர்ச்சி பெற்றவர்கள்: 7,39,539 (91.17%)
மாணவியர் 4,04,143 (94.69%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் 3,35,396 (87.26%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட 7.43% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்,
கடந்த மார்ச்- 2023-ம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,76,844.
தேர்ச்சி பெற்றோர் 7,06,413. தேர்ச்சி சதவிகிதம் 90.93%.

கூடுதல் விவரங்கள்

மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7534.
100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 1964.
100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 241.

பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவிகிதம்

அரசுப் பள்ளிகள் 85.75%
அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.36%
தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.09%
இருபாலர் பள்ளிகள் 91.61%
பெண்கள் பள்ளிகள் 94.46%
ஆண்கள் பள்ளிகள் 81.37%

பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம்

அறிவியல் பாடப் பிரிவுகள் 94.31%
வணிகவியல் பாடப் பிரிவுகள் 86.93%
கலைப் பிரிவுகள் 72.89%
தொழிற்பாடப் பிரிவுகள் 78.72%

முக்கியப் பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம்

இயற்பியல் 97.23%
வேதியியல் 96.20%
உயிரியல் 98.25%
கணிதம் 97.21%
தாவரவியல் 91.88%
விலங்கியல் 96.40%
கணினி அறிவியல் 99.39%
வணிகவியல் 92.45%
கணக்குப் பதிவியல் 95.22%

முக்கியப் பாடங்களில் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை

தமிழ் 8
ஆங்கிலம் 13
இயற்பியல் 696
வேதியியல் 493
உயிரியல் 171
கணிதம் 779
தாவரவியல் 2
விலங்கியல் 29
கணினி அறிவியல் 3432
வணிகவியல் 620
கணக்குப் பதிவியல் 415
பொருளியல் 741
கணினிப் பயன்பாடுகள் 288
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 293

ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மாணாக்கர்களின் எண்ணிக்கை – 8418.

தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 8221. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 7504 (91.27%).
தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 187 தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 170 (90.90%).

+1 தேர்ச்சி கோவை முதலிடம்

கோவை 96.02%
ஈரோடு 95.56%
திருப்பூர் 95.23%
விருதுநகர் 95.06%
அரியலூர் 94.96%

The post வெளியானது 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. 91.17% மாணவர்கள் தேர்ச்சி… கோவை மாவட்டம் முதலிடம்!! appeared first on Dinakaran.

Tags : 11th class general election ,KOI DISTRICT ,Chennai ,Tamil Nadu ,11th ,general election ,Dinakaran ,
× RELATED கோவையில் 2 மணி நேரத்திற்க்கு மேலாக...