×

தென்மேற்கு பருவமழை மே 19-ல் துவங்க வாய்ப்பு

டெல்லி: தென்மேற்கு பருவமழை மே 19-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக் கடல், நிகோபர் தீவுகளில் பருவமழை முன்கூட்டியே மே 19-ல் துவங்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கர்நாடகாவில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

The post தென்மேற்கு பருவமழை மே 19-ல் துவங்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Indian Meteorological Centre ,South Andaman Sea ,Southeast Bank Sea ,Nicobar Islands ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு