×
Saravana Stores

மும்பையில் புழுதிப் புயலால் விளம்பர பலகை சரிந்து விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

 

மும்பையில் புழுதிப் புயலால் விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மும்பையில் திடீர் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி நேற்று நகரில் சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. புழுதிப்புயலும் வீசியது. திடீர் மழை மற்றும் புழுதிப்புயல் காரணமாக விமானம், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் சேவைகள் பாதிப்படைந்தன. குறிப்பாக, ஆரே – அந்தேரி இடையே விளம்பர பேனர் விழுந்து வயர்கள் துண்டிக்கப்பட்டதால் இந்த வழியாக இயக்கப்பட வேண்டிய மெட்ரோ ரயில் சேவை நிறத்தப்பட்டது.

ஹார்பர் லைனில் இயக்கப்பட வேண்டிய புறநகர் ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டது. புழுதிப்புயல் காரணமாக காட்கோபர் செட்டாநகர் ஜங்ஷனில் 100 அடி உயர பிரமாண்ட விளம்பரப் பலகை பயங்கர சத்தத்துடன் சரிந்து பெட்ரோல் பங்க் மீது விழுந்தது. இதனால் அப்பகுதியில் நின்றிருந்த மற்றும் அந்த வழியாகச் சென்ற பலர் சிக்கிக் கொண்டனர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 57 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, ராஜாவாடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 8 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் 70 பேர் காயம் அடைந்ததாக மும்பை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 100 அடி உயரம் கொண்ட ராட்சத விளம்பர பலகை இரும்பு சாரங்களுடன் விழுந்ததால் அருகில் இருந்த வீடுகள் சேதமாகியுள்ளது.

The post மும்பையில் புழுதிப் புயலால் விளம்பர பலகை சரிந்து விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Meteorological Centre ,Bumthi ,
× RELATED வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை கூடுதலாக பெய்துள்ளது