சென்னை: சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வெப்பம் காரணமாக தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை என தொழிலக பாதுகாப்பு இயக்ககம் தெரிவித்துள்ளது. விதிமுறைகள் கட்டுமான நிறுவனங்கள் பின்பற்றுகின்றனவா என்று சென்னை, மதுரையின் இணை இயக்குனர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திறந்தவெளி கட்டுமானத்துக்கான கட்டுப்பாடு மே இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post வெயில் தாக்கம் – திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு appeared first on Dinakaran.