×
Saravana Stores

ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா செல்ல தடுப்பூசி செலுத்துவது அவசியம: ஒன்றிய அரசு வலியுறுத்தல்

 

டெல்லி: வெளிநாடு செல்பவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஒன்றிய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் பரவி வருகிறது. எனவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 நாட்களுக்கு பின்னரே மேற்கண்ட நாடுகளுக்கு செல்லவும், அங்கிருந்து இந்தியா வரவும் அனுமதிக்கப்படுவர். விமான நிலையங்கள், துறைமுகங்களில் வெளிநாடு செல்லும் பயணிகள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா என கண்காணிக்கப்படும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாட்டில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசிக்கு 3 மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் செவ்வாய், மற்றும் வெள்ளி கிழமைகளில் காலை 10 மணி முதல் 12 மணி வரை மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள துறைமுக சுகாதார நிறுவனத்தில் தங்கள் மற்றும் புதன் கிழமைகளில் காலை 9 மணி முதல் 12 மணி வரையும், தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் காலை 11 மணி முதல் 9 மணி வரை தடுப்பூசி வழங்கப்படும். இந்த 3 மையங்களிலும், அசல் கடவுச் சீட்டு மற்றும் சுய விவர குறிப்புடன் பதிவு செய்து 300 ரூபாய் செலுத்தி தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா செல்ல தடுப்பூசி செலுத்துவது அவசியம: ஒன்றிய அரசு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Africa, South America ,EU Government ,Delhi ,EU health department ,Africa ,South American ,
× RELATED பூதாகரமாகும் மியூல் வங்கிக் கணக்கு...