×

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

சேந்தமங்கலம், மே 14: எருமப்பட்டி பேரூராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. கால்நடை வளர்ப்பு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில், எருமப்பட்டி பேரூராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா தலைமை வகித்தார். தொகுதி தொழில்நுட்ப மேலாளர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். முகாமை கால்நடை மருத்துவர் சேகர் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் துறையூர் இமயம் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள், ஊரக வேளாண் பணி அனுபவத்தின் கீழ் மருத்துவ முகாமில் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு குறித்த செயல் விளக்கம் அளித்தனர். மழைக்காலங்கள், கோடை காலங்களில் கால்நடை பராமரிப்பு, அதற்கான தீவனங்கள், பால் உற்பத்தியை பெருக்குவதற்கான வழிமுறைகள், நோய் தாக்குதலில் இருந்து கால்நடைகளை பாதுகாத்தல், வீடுகளில் வளர்க்கும் நாய்களை எவ்வாறு பராமரிப்பது, அதற்கான தடுப்பு ஊசிகள், உணவு பழக்க வழக்கங்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். அப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு, கால்நடைகளுக்கு இலவசமாக சிகிச்சை பெற்றனர்.

The post சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Special Veterinary Camp ,Senthamangalam ,Erumapatti ,Namakkal District ,Erumapatti Regional Agriculture and ,Farmers Welfare Department ,Animal Care Department ,Erumapatti Municipality ,Special Veterinary Medical Camp ,Dinakaran ,
× RELATED அக்கா, மாமாவை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது