×

கரூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே நடைபாதையில் இருந்த கடைகள் அகற்றம்

கரூர், மே 14: கரூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே நடைபாதையை ஒட்டி போடப்பட்டிருந்த கடையை அகற்றும் பணி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியை ஒட்டி நடைபாதையோரம் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளை அகற்ற வேண்டும் பல்வேறு கோரிக்கைகள் வந்தன. இதனடிப்படையில், மாநகராட்சி ஊழியர்கள் ஏராளமானோர் நேற்று மாலை, பள்ளி எதிரே அமைக்கப்பட்டிருந்த சில கடைகளை அதிரடியாக அகற்றும் பணியை மேற்கொண்டனர்.

இந்த கடைகள் அகற்றும் பணிகள் காரணமாக இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கரூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே நடைபாதையில் இருந்த கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Karur Corporation ,High School ,Karur ,Karur Corporation High School ,High ,School ,Dinakaran ,
× RELATED தேக்கமடைவதை கண்டறிந்து பாசன வாக்காலை...