×
Saravana Stores

ஜெயங்கொண்டம் அருகே அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்கநகை, வெள்ளி ெபாருட்கள் கொள்ளை

ஜெயங்கொண்டம், மே14:ஜெயங்கொண்டம் அருகே அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது திரவுபதி அம்மன் கோயில். இக்கோயிலை வழக்கம் போல நேற்று முன் தினம் இரவு பூட்டிவிட்டு நேற்று காலை கோயில் பூசாரி கொளஞ்சிநாதன் திறந்து உள்ளார் .

அப்பொழுது அம்மனின் கழுத்தில் போடப்பட்டிருந்த தாலி செயின் தங்க காசு அடங்கிய 17 பவுன் செயின் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணாதது கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்தனர் விசாரணையில் கோயிலை சுற்றி கம்பி வேலி போடப்பட்டிருந்த நிலையில் தண்ணீர் பைப் போடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த குழாயின் வழியாக உள்ளே வந்த மர்ம நபர்கள் அம்மனின் கழுத்தில் போடப்பட்டிருந்த நகையை திருடி சென்றிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் மர்ம நபர்கள் குறித்து அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதா? என்பது குறித்தும் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post ஜெயங்கொண்டம் அருகே அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்கநகை, வெள்ளி ெபாருட்கள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Amman ,Jeyangondam ,Jayangkondam ,Dhraupathi Amman Temple ,Jayangkondam Melakudiripu ,Ariyalur district ,
× RELATED திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி...