×
Saravana Stores

புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டணமில்லா பேருந்தில் 9.62 கோடி மகளிர் இலவச பயணம் ‘கல்லூரிக் கனவு” நிகழ்ச்சியில் பெறப்பட்ட தகவல்கள் மூலம் சிறந்த உயர்கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டும்

புதுக்கோட்டை, மே14: புதுக்கோட்டை மாவட்டம், சிவபுரம் ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டி ஊக்குவிப்பு நிகழ்ச்சியை, கலெக்டர் மெர்சி ரம்யா, நேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் ‘கல்லூரிக் கனவு” கையேட்டினை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:
தமிழக அரசு மாணவ, மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி பயில வழிகாட்டுவதற்காக, நான் முதல்வன் திட்டத்தின்கீழ், ‘கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டி ஊக்குவிப்பு நிகழ்ச்சி இன்றையதினம் புதுக்கோட்டை, சிவபுரம் ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், போட்டி தேர்வுகள் எழுத வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், உங்கள் எதிர்கால கல்வியினை எவ்வாறு தேர்வு செய்வது குறித்தும், பொறியியல், பொறியியல் சார்ந்த படிப்புகள், ஐ.டி.ஐ. கல்வி, மருத்துவம், சட்டம், கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் குறித்தும், சிறந்த கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் விரிவான தகவல்களை வழங்க உள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று தற்போது உயர்பதவியில் உள்ள அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து, ஊக்கமளிக்கும் வகையில் உரை நிகழ்த்தி வழிகாட்ட உள்ளனர்.

எனவே 12ம் வகுப்பு தேச்சி பெற்றுள்ள மாணவ, மாணவியர்கள் அனைவரும், இந்த ‘கல்லூரிக் கனவு” நிகழ்ச்சியில் பெறப்பட்ட தகவல்கள் மூலம் சிறந்த உயர்கல்வியினை தேர்ந்தெடுத்து கல்வியில் சிறப்பாக விளங்கிட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டணமில்லா பேருந்தில் 9.62 கோடி மகளிர் இலவச பயணம் ‘கல்லூரிக் கனவு” நிகழ்ச்சியில் பெறப்பட்ட தகவல்கள் மூலம் சிறந்த உயர்கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pudukottai district ,Pudukottai ,Sivapuram J.J. College of Arts and Science ,Mercy ,
× RELATED புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு போட்டி