- சத்யா விளையாட்டு ஸ்டேடிய
- தஞ்சாவூர்
- தஞ்சாவூர் சத்யா விளையாட்டு அரங்கம்
- தஞ்சாவூர் சத்யா நடை சங்கம்
- ராஜப்பா நகர் முதல் தெரு
- தின மலர்
தஞ்சாவூர், மே 14: தஞ்சாவூர் சத்தியா விளையாட்டு அரங்கத்தில் 1000 மரக்கன்றுகள் நடுவது என நடைபயிற்சி சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூர் சத்தியா நடைப்பயிற்சி சங்க கூட்டம் ராஜப்பா நகர் முதல் தெருவில் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க கவுரவத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். சங்க தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் துணைத் தலைவர் கண்ணாடி குமார், ஜெயபாலன், ராஜன், செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ராஜசேகரன், முரளி, சுப்ரமணியன், சுகுமார், நாகராஜன் மற்றும் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சத்யா அரங்கத்தில் வருபவர்கள் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு வர வேண்டும். சத்யா விளையாட்டு அரங்கத்தில் உள்ள 1000 மரக்கன்றுகள் இந்த மாதத்தில் வைப்பது எனவும் அது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர், மாவட்ட விளையாட்டு துறை அதிகாரியை நேரில் சந்திப்பது. முன் நுழைவுவாயில் அவசர ஏற்பாடுகளாக முதலுதவி பெட்டி வைப்பது. முன் நுழைவுவாயில் நடைப்பயிற்சி வருவோர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைப்பது.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள 8 கிமீ நடைப்பயிற்சியில் அனைத்து நடைப்பயிற்சியாளரும் மாதம் ஒரு முறை கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனம் வைக்கும் இடத்தில் சிசிடிவி கேமரா வைப்பதற்கு காவல்துறை கண்காணிப்பாளர்களை சந்திப்பது. நடைப்பயிற்சியாளர் சங்கத்தின் பெயர்ப்பலகை வைத்து தினம் தினம் ஒரு திருக்குறள் எழுதுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் பொருளாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.
The post சத்யா விளையாட்டு அரங்கத்தில் 1000 மரக்கன்றுகள் appeared first on Dinakaran.