திருவாரூர், மே 14: முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு மேற்படிப்பு சான்று வழங்கப்பட உள்ளது என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு தெரிவிததுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் வாரிசுகளுக்கு மேற்படிப்பிற்கான சான்று 2024-25ம் ஆண்டிற்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள், சார்ந்தோர் சான்று பெறுவதற்கு பூர்த்தி செய்த படிவம், 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், மேற்படிப்பிற்காக விண்ணப்பம் செய்த படிவத்தின் நகல், அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் நேரில் இவ்வலுவலகத்தை அணுக வேண்டும்.
மருத்துவ படிப்புகளுக்கு Priority-I முதல் Priority-V வரை விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் என கருதும் முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் அந்தந்த முன்னுரிமையை உறுதிப்படுத்திட தேவையான ஆவணங்களை தத்தம் ஆவணக்காப்பகங்களிடமிருந்து பெற்றிட வேண்டும். மேலும் விவரங்கள் அறிய திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (04366-290080) தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக வேண்டும் முன்னாள் படை வீரர்களுக்கு மேற்படிப்பு முன்னுரிமை சான்று appeared first on Dinakaran.