×

வத்தலக்குண்டுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வத்தலக்குண்டு, மே 14: வத்தலக்குண்டு மாரியம்மன் கோயில் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமை வகித்தார். வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் போதுராஜன், மாவட்ட துணை செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். நிர்வாகி முத்தையா வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் நிலக்கோட்டை தாலுகா கரியாம்பட்டி நடுப்பட்டியில் தூங்கி கொண்டிருந்த முதியவர் ஆண்டாரை கொலை செய்தவர்களை குண்டாசில் கைது செய்ய வேண்டும், ஆண்டாரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் நிர்வாகிகள் பொன்ராம், திராவிடன், அகிலன், மாயி, துணை பொதுச்செயலாளர் கனியமுதன், மண்டல செயலாளர் தமிழ்வாணன், மண்டல துணை செயலாளர் அன்பரசு, மாநில துணை செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post வத்தலக்குண்டுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Liberation Tigers ,of ,India ,Vatthalakundu ,Vatthalakundu Mariamman Temple ,Liberation Tigers Party ,District Secretary ,Tamilarasan ,Vatthalakundu Union ,Pakiyaraj ,Nilakottai ,Union Secretary ,Patharajan ,District Deputy Secretary ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்-சபரிமலை ரயில் திட்டத்தை வலியுறுத்த கோரி எம்பியிடம் விசிக மனு