மதுரை, மே 14: மதுரை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து அதிக அளவில் மருத்துவக் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவுநீர் வைகை ஆற்றில் கலப்பதாக புகார் எழுந்தது. இதன்பேரில் மதுரை ஐகோர்ட் கிளையிலும் வழக்கு நடந்து வருகிறது. இதற்கிடையில் மதுரை மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் நேற்று மதுரை அரசு மருத்துவமனைக்கு அதிகாரிகளுடன் திடீரென வந்தார்.
அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அரசு மருத்துவமனையின் கழிவுகளும், கழிவு நீரும் நேரடியாக வைகை ஆற்றில் கலக்கிறதா என நேரடி ஆய்வில் ஈடுபட்ட கமிஷனர், மருத்துவ அதிகாரிகளிடம் கூடுதல் விபரங்களைகேட்டறிந்தார். மாநகராட்சி மருத்துவ அதிகாரி வினோத், மருத்துவமனை இருப்பிட அதிகாரி சரவணன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
The post வைகையாறு செல்கிறதா கழிவுநீர்… மதுரை அரசு மருத்துவமனையில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு appeared first on Dinakaran.