×

சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் நியமனம்

மதுரை, மே 14: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது. இது ஏழை மக்களுக்கு வழக்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் சட்ட உதவிகளை செய்கிறது. 2024 முதல் 2027 வரை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் பணியாற்ற புதிய வழக்கறிஞர்களுக்கான நேர்முகத்தேர்வு கடந்த மாதம் நடந்தது. இதில் 180க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இறுதி நேர்முக தேர்வு முடிந்து சீனியர் பிாிவில் உமாசங்கர், ஜூட் ஜோசப்ராஜ், ரவிக்குமார், கவிதா, ராமர், பிரசன்னா, செல்லத்துரை, சிவானந்தன், முத்துக்குமார், ராஜா, சுதாகரன், சங்கரசூரிய நாராயணன் உள்ளிட்ட 25 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

The post சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Legal Affairs Commission ,Madurai ,District Legal Affairs Committee ,Madurai District Court ,Dinakaran ,
× RELATED சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்